girl groups

நல்வரவு 

மரபு, பண்பாடு, விழுமியம், வரலாறு, மொழி என்பன ஓர் இனத்தின் அடையாளங்கள் ஆகும். இவையே அவ்வினத்தின் இருப்புக்கான ஆணிவேராக அமைகின்றன. தமிழினம் இவ்வடையாளங்களை மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் சுமந்து வருகின்றது. இவற்றை, புலம்பெயர் நாட்டில் நாம் இழந்து விடக் கூடாது என்பதற்காகவும் இவற்றை எமது அடுத்த தலைமுறை அறிய வேண்டும் என்பதற்காகவும் 1993 ஆம் ஆண்டு கனடாத் தமிழ்க் கல்லூரி உருவாக்கம் பெற்றது. கனடிய அரசில் வருவாய் நோக்கற்ற அமைப்பாக இக்கல்லூரி பதியப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் இக்கல்லூரியில் இணைந்து பல்லாயிரம் மாணவர்கள் தமிழ், தமிழர் சார்ந்த கற்கை நெறிகளைக் கற்று வெளியேறியுள்ளனர். .

தமிழர் எங்கள் பேர்! தமிழே எமக்கு வேர்!
மேலும் வாசிக்க

வகுப்புகள் - Classes

secondary classes

தொடக்கநிலை

secondary classes

இடைநிலை

courses

நுண்கலை

திறன் தேர்வுகள்

ஒவ்வொரு குழந்தையுள்ளும் திறன்கள் நிறைந்தே கிடக்கின்றன. அவற்றைப் புடம் போட்டு வளர்ப்பது எமது கடமையாகும். துறைகள் தோறும் தமிழர் பெருமையுறல் வேண்டும்.

மேலும் வாசிக்க

தமிழ் ஆசிரியர்

எமது மாணவரின்  வெற்றியை உறுதி செய்வதில் ஆசிரியர் மிக முதன்மையான பங்கு வகிக்கிறார்கள். அதனாலேயே நாம் அதிசிறந்த தகைமை, பட்டறிவுள்ள ஆசிரிய வல்லுனர்களை உங்களுக்குப் பெற்றுத் தருவதில் அர்ப்பணிப்போடு செயற்படுகிறோம். 
புலம்பெயர் சூழலில், தனது மொழி அறியாது வளரும் குழந்தை எவ்வாறு தனது பண்பாட்டை அறியப் போகின்றது? ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான தனது பண்பாட்டைத், தாய்மொழி தெரியாத எமது குழந்தை எவ்வாறு அறிய முடியும்? 
 
அடையாளத் தேடலை, தங்கள் வகுப்புகளில் உங்கள் குழந்தைகளுக்குள் விதைக்கிறார்கள் எமது ஆசிரியர்கள்.


மேலும் வாசிக்க

கலை ஆழி 

‘கலை ஆழி’ என்னும் சிறப்புப் பெயரோடு, கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழ் மக்களால் பயிலப்பட்டும் பேணப்பட்டும் வரும் தமிழிசை, தமிழ் ஆடற்கலை மற்றும் தமிழ் இன்னியங்களைக் கனடாத் தமிழ் மாணவரும் பயில வேண்டும் என்ற நோக்கோடு இப்பிரிவு இயங்குகிறது.

மேலும் வாசிக்க

உரையாடுவோம் 

தொலைபேசி: 416-757-2006
மின்னஞ்சல்: contact@tamilacademy.org

எங்களுக்கு செய்தி

Contact Us

நற்சான்றுகள்

"எனது அம்மாவின் மொழியையும் நாட்டையும் பற்றிக் கனடாத் தமிழ்க் கல்லூரியின் வகுப்பிலே கற்கின்றேன்"
க.முகுந்தன், மில்டன்
"கனடாத் தமிழ்க் கல்லூரியின் திறமைநெறி வகுப்பிலே நான்கு ஆண்டுகள் தமிழ் படித்தேன். தமிழரின் வரலாறு, பண்பாடு, இலக்கியம் என்பவற்றை எளிதாகவும் அருமையாகவும் விளக்கிய என் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கின்றேன்". 
உ. ஆரணி, ரொரன்ரோ
"புலம்பெயர்ந்து வந்தபின், தமிழுக்கும் எனக்கும் மீண்டும் ஒரு உறவைக் கனடாத் தமிழ்த் கல்லூரி ஏற்படுத்தித் தந்ததை நான் என்றும் மறவேன். தமிழில் இளங்கலை, முதுகலை என உயர்கல்வியைத் தந்து, என்னை ஆற்றுப்படுத்திய தாய் கனடாத் தமிழ்க் கல்லூரியே".

க. தேன்மொழியாள், இசுக்காபரோ
சனிக்கிழமைத் தமிழ் வகுப்பை வெறுமனே ஒரு வகுப்பு என்று கடந்துவிட என்னால் முடியாது. அங்குதான் என் வேர்களை அறிந்தேன். எனக்குக் கிடைத்த ஆசிரியர்களின் கற்பித்தல் உத்திகள், நான்கு ஆண்டுகளாய் தமிழை விரும்பிப் படிக்க வைத்தது. படிப்பை மட்டுமல்ல நல்ல நண்பர்களையும் பெற்றேன். என் உற்ற தோழிகள், கனடாத் தமிழ்க் கல்லூரியின் தமிழ் வகுப்பில் என்னோடு ஒன்றாய் படித்தவர்களே"
யசுமிலா , மார்க்கம்
Share by: